பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி பாராட்டு

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா பாராட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்தார். இதன்போதே தென்னாபிரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றையும் அவர் பாராட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *