வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டாலும், ரயில்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

Share Button
வேலைநிறுத்தம் இடம்பெற்றாலும், இன்று முற்பகல் பல்வேறு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் நலன்கருதி பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் எமது நிலையத்திற்கு அறிவித்துள்ளார்கள். அதிவேக நெடுஞ்சாலையிலும் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தேவையின் அடிப்படையில் தேவையான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
பயணிகளின் தேவைகளுக்கு அமைய, பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. தற்சமயம் அமுலாகும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றிரவு முடிவிற்கு வரும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையினால், நெருக்கடி நிலை ஏற்பட்டதாக ரயில்வே நிலைய பொறுப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *