ஜி20 அமைப்பின் மாநாடுகள் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது

Share Button
ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று ஜப்பானின் ஒஸாக்கா நகரில் ஆரம்பமாகிறது. உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்; இடம்பெறும் மிக முக்கியமான கூட்டமாக இது கருதப்படுகிறது. எதிர்கால பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் நாளை ஒஸாக்கா நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார யுத்தம் வலுடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரும் பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் நிலைப்பாடுகள் பற்றி இதன்போது கூடுதலாக கவனம் செலுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *