போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பல வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுப்பு.

Share Button

போதையற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பல மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் இறுதிக் கட்டம் மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார். இன்று காலை எமது நிலையத்தில் இடம்பெற்ற எத்துல்பெத்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

 

போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு மேலதிகமாக அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரஜீவ மெதவத்த கருத்து தெரிவிக்கையில், சட்டவிதிகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒரு போதைப் பொருள் கடத்தல்காரரினால் கிராமமும், நாடும் வேறு திசைக்கு மாறுமாயின், அவருக்கு எதிராக சட்டத்தை ஆகக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 1984 அல்லது 0718 592 621 என்பதாகும். இவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல்களை வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2