வைத்தியர் சாபிக்கு எதிராக வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்தன தேரர் செய்துள்ள முறைப்பாட்டில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

Share Button

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை உரிய வகையில் இடம்பெறவில்லை என்று முறைப்பாடொன்றை சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரட்னவிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அனுப்பி வைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இன்று அறிவித்துள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *