உலகக் கிண்ணம் இங்கிலாந்து இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி. இன்று இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

Share Button

12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரின், 38வது போட்டி, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பெர்மிங்ஹாமில்   நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 31ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 337ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், துடுப்பாட்டத்தில் ஜொனி பெஸ்ட்ரோ   111 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மொஹம்மட் ஷமி   69ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 338 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகளை இழந்து 306ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதேவேளை, இன்று இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15ற்கு ஆரம்பமாகும். அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றொரு ஆர்வம் இருந்தால், இலங்கை அணி இந்தப் போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்திலோ, அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்திலோ அபார வெற்றி பெற வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அடுத்த போட்டியான இந்திய அணியுடனான போட்டியிலும் இலங்கை அணி அதிக ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *