வடகொரியாவுக்கு விஜயம் செய்த, அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் பதிவு
வடகொரியாவுக்கு விஜயம் செய்த அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், இன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
வட மற்றும் தென்கொரிய எல்லையின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி வடகொரியாவின் எல்லைக்குள் பிரவேசித்தார். வடகொரியத் தலைவருடன், அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட மற்றும் தென்கொரிய எல்லையின் யுத்த சூனியப் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அணுவாயுத நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளுக்காக இருதரப்பினரையும் இணைத்து, குழுவொன்றை அமைக்க இரண்டு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.