புகையிலை பொருளுக்கான விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது

Share Button

எண்ணெய் விலை தொடர்பான சூத்திரத்தைப் போன்று புகையிலைப் பொருள் விலை தொடர்பிலும் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதற்காக தற்சமயம் அமைச்சரவைக்கு திருத்தச் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

புகையிலை பொருள் பாவனையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைவில் அரச மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் நிலையங்களின் ஊடாக ஆலோசனை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *