குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Share Button

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் திடீர் நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை பாரதூரமானதாக இல்லை என தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவின் விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

பூஜித் ஜயசுந்தர நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகுமாறு இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *