கிராம பாதுகாப்புப் படைவீரரை வீட்டுப் பணியில் ஈடுபடுத்திய முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

Share Button

கிராம பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தமது வீட்டில் சேவைக்கு அமர்த்தியிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இவர் மூன்று லட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன இன்று உத்தரவிட்டார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த 16 முறைப்பாடுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆறு வழக்குகளின் கீழ் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். ஏனைய ஒன்பது குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பின் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *