ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இவர்களுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்தார். கட்சியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக்க இரத்தினபுரி தொகுதியின் அமைப்பாளராவார். உதார சொய்சா பிபில தொகுதியின் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்னேரிய தொகுதியின் ஹிங்குராங்கொட பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான புதிய அமைப்பாளர் பி.ஆர் உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். அலஹர பிரதேச சபையின் இணை அமைப்பாளராக ரோஹித்த ஹத்தொட்டுவ நியமிக்கப்பட்டிருக்கின்றார். லால் சிசிர பண்டார கலகெதர தொகுதியின் புதிய அமைப்பாளராவார்.