கொழும்பு – கோட்டை – மாலபே இலகு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

Share Button

கொழும்பு – கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் இலகு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன.

கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இந்த இலகு ரயில் பாதை 11 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக அமைய உள்ளது. இதில் 16 ரயில் தரிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. நான்கு பெட்டிகளைக் கொண்ட இலகு ரயில்கள் இந்தச் சேவையில் ஈடுபடும். இதில் 800பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ரயில் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான தனது பயணத்தை 30நிமிடத்தில் நிறைவு செய்யும். இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2024ம் ஆண்டு பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *