எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் அபிவிருத்தி வேகம் மேலும் அதிகரிக்கப்படும் – பிரதமர்

Share Button

சகல அபிவிருத்தித் திட்டங்களையும் இடைநடுவில் கைவிடாது, இந்த ஆண்டில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமும் அதிகரிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி, வீடமைப்பு லொத்தர் சீட்டிழுப்பின் வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் பொழுது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

செப்ரெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்குள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர்களுக்கு, பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *