முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விளக்கமறியலில்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இவர்கள் தங்கியிருந்த மருத்துவமனைகளுக்குச் சென்று ஆராய்ந்ததன் பின்னர், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான், இரகசியப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.