உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்களாதேஷிற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 28ஓட்டங்களால் வெற்றி.

Share Button

12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40ஆவது போட்டி நேற்று இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 104ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி, சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று இங்கிலாந்து – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *