பயிற்றப்படாத ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் சமூத்தில் நெருக்கடிகளை உருவாக்குவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்

Share Button

அரசியல்வாதிகளை போன்று ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை பற்றியும் நெருக்கடிகள் காணப்படுவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகஆராச்சி தெரிவித்துள்ளார். பயிற்றப்படாத ஊடகவியலாளர்கள் குறுகிய நோக்கங்களுக்கான பலிகடாக்களாக மாற்றப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். சமூகத்தில் குழப்பங்களை விளைவிக்க இது காரணமாக அமையும் என்று அவர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.

செய்திகளில் பயன்படுத்தப்படும் தலைப்புச் செய்திகள் பற்றி முறைபாடுகளே கூடுதலாகக் கிடைப்பதாக இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஆணையாளர் நிரோஷன் தம்பவிட்ட தெரிவித்துள்ளார். இதனால், ஊடகங்கள் சுய ஒழுங்குறுத்தல்கள் பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகும். டொக்டர் சாபி தொடர்பான செய்தி அறிக்கையிடலில் காணப்பட்ட குறைபாடுகளை உரிய பத்திரிகைக்கு திருத்தியிருக்க முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகில் இலவச உணவுகளை வழங்கும் ஜனபோச வேலைத்திட்டமும் இவ்வாறான போலிச் செய்தியினாலேயே இடைநிறுத்தப்பட்டதாகவும் நிரோஷன் தம்பவிட்ட கூறினார்.

அவசரகால சட்டத்தின் கீழ், மக்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தும் செய்தியை பிரசுரிப்பது சட்டரீதியான குற்றமாகும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11