இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகளை சிறுநீரக நோயாளர்களுக்கு வீடுகளில் செய்து கொள்வதற்கான வசதி

Share Button

சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கையை வீடுகளில் மேற்கொள்வதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகிறது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சரவை நியமித்த நிலையான கலந்துரையாடல் குழுவின் பரிந்துரைக்கமைய, தெரிவு செய்யப்பட்ட ஒரு சிறுநீரக நோயாளிக்கென மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாவிற்கு அதிகமான தொகை ஒதுக்கப்படவிருக்கிறது. இதற்கென தனியார் சுகாதார சேவை நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *