பொலன்னறுவையில் பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
இலங்கையின் முதலாவது பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகமும், நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவையில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய தொழில்நுட்ப அருங்காட்சியகம் இலங்கையின் பாரம்பரிய தொழில்நுட்ப ஆற்றல்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது.
மூன்று மொழிகளிலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். அருங்காட்சியகத்தின் நினைவு படிகத்தையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.