உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.

Share Button
உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பெயார்ஸ்ரோ 106 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டு;க்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. டொம் லெத்தெம் 57 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து அணி சார்பாக மார்க் வுட் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். ஜொலி பெயார்ஸ்டோர் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
இதேவேளை, புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கும் இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முதலாம் இரண்டாம் இடங்களில் உள்ளன. நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *