லோன்லி பிளனட் சஞ்சிகை இலங்கையை சுற்றுலாவுக்கான சிறந்த அமைவிடமாக பெயரிட்டிருப்பது நாட்டிற்குக் கிடைத்த வெற்றி – பிரதமர்

Share Button
லோன்லீ பிளேனட் சஞ்சிகை இலங்கையை சுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த அடைவிடமாக மீண்டும் பெயரிட்டிருப்பது நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றைக் கருத்திற்கொள்ளாமல் இலங்கை மக்கள் சினேகபூர்வமாக தம்மை வரவேற்றதாக அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் தற்போது நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் லோன்லீ பிளேனட் சஞ்சிகை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இலங்கையர்களாகிய எமக்கு பாரிய அளவில் ஊக்கமாக அமைந்துள்ளது.
இந்தக் கௌரவத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்த சுற்றுலாத்துறையின் அனைத்துத் தரப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையை மீண்டும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர தமது அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்குமென்று சுட்டிக்காட்டினார். விசேட உரையொன்றை நிகழ்த்தி பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நவீன இலகு ரயில் சேவைக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்த நூற்றாண்டின் நவீன யுகத்திற்கு ஏற்ற விசேட பங்களிப்பை வழங்க முடிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  இலகுரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டை நவீனமயப்படுத்தும் இலக்கை அடைந்து கொள்வதற்காக கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு நவீன நகரை அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்பமாக இது அமைந்துள்ளதென பிரதமர் குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இலகுரயில் சேவை செயற்றிட்டம் வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றமாகும் என குறிப்பிட்டார்.
கடந்த 15 வருடங்களில் அரசாங்கத்தின் மூலதன செலவினத்தில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகை போக்குவரத்துத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துத் துறையை பலப்படுத்துவதற்கு இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகும். ரயில் நிலையத்தை அண்டியுள்ள மெனிங் சந்தை அடுத்த வருடம் வேறொரு இடத்திற்கு மாற்றப்படும்.
பலநோக்கு போக்குவரத்து மையமொன்றை அமைக்கும் வகையில், கோட்டை ரயில்வே நிலையம், பஸ் நிலையங்களுடன் இணைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11