மரணதண்டனை: எதிர்வரும் ஒக்டொபர் வரையில் இடைக்காலத்தடை! உயர்நீதிமன்றம்

Share Button

மரணதண்டனை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை தடை செய்யும் உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது.

மரணதண்டனையை அமுல்படுத்துவதை தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த 12 மனுக்களை ஆராய்ந்ததன் பின்னர் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருக்கிறது.

புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர,: பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.

இந்த விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி ஆராய்வதற்கு தீர்மானித்திருக்கிறது.

இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன தாக்கல் செய்த மனு இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதில் சாட்சியம் அளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரி.எம்.டபிள்யூ தென்னக்கோன், எந்தவொரு சிறைக்கைதிக்கும்; எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மரணதண்டனை நிறைவேற்றப்படமாட்டாது என்று அறிவித்தார்.

உரிய தினத்திற்கு முன்னர் எந்தக் கைதிக்கும் மரணதண்டனை விதிக்குமாறு தனக்கு உத்தரவு பிறப்பிக்கபடுமாயின் அது பற்றி நீதிமன்றத்திற்கு அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேன்முறையீட:டு நீதிமன்றத்தின் தலைவர் யசந்த கோதாகொட, தீபாலி விஜயசுந்திர, ஜனத் டி சில்வா, அச்சல வெங்கப்புலி, அர்ஜூன ஒபயசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென கூறி சட்டமா அதிபர் இதற்கு முன்னர் முன்வைத்திருந்த எதிர்ப்புத் தொடர்பான உத்தரவு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படுமென்றும் மனுவை விசாரிப்பது தொடர்பான முறைப்பாட்டை விசாரிப்பதற்குரிய நோட்டீசை வெளியிடுவது பற்றி அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11