வறுமை ஒழிப்புஇ சிறந்த கல்வியை வழங்குதல் தமது பொறுப்பாகும் என்கிறார் ஜனாதிபதி!

Share Button

மக்களின் வறுமை நிலையை ஒழிக்கவும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் தாம் முன்னுரிமை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் கற்றவர்களாக மாறும்போது அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென ஜனாதிபதி கூறினார். பொலநறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டடங்களை மாணவர்களின் பாவனைக்காக வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும்போது பிள்ளைகளை நாட்டை நேசிக்கும் பிரஜைகளாக கட்டியெழுப்புவது அவசியமாகும்.

மீள் எழுச்சி பெறும் பொலநறுவை போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் இந்த அபிவிருத்திப் பணி முன்னெடுக்கப்பட்டது.

பொலநறுவை கவுதுல்ல மகாவித்தியாலயம், கல்லமுன மகாவித்தியாலயம் என்பனவற்றின் புதிய இரண்டு மாடிக்கட்டடங்களை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மீகஸ்வௌ கனிஷ்ட வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடம், அம்பகஸ்வௌ கல்லூரியின் கேட்போர் கூடத்துடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடம் என்பன மாணவர்களுக்காக கையளிக்கப்பட்டன.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அம்பகஸ்வௌ மகா வித்தியாலயத்தின் ஏனைய அபிவிருத்திகளுக்காக 50 இலட்சம் ரூபாவையும் ஜனாதிபதி கையளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11