உயிர்த்த ஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழு அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழு அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட்டு;ள்ளதாகவும் அவர் கூறினார். பொலநறுவையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட பௌத்த பிக்குகளுக்கான விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார். நாட்டில் கடந்த காலங்களில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

எந்தவொரு அரசாங்கம் உறுதிப்படுத்தாத வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் ஜனநாயகமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் நாட்டில் எதிர்பாரத நிலை ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட சகல பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதோடு சிலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *