அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு போட்டிப் பரீட்சைகள்!

Share Button

அரச சேவையில் புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்காக பல போட்டிப் பரீட்கைள் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி கொழும்பில் இடம்பெறும்.

இதற்காக 6,500 பரீட்சார்ததிகள் தோற்றவுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை28ம் திகதி வடைபெறும்.

இதேவேளை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும், பரீட்சைத் திணைக்களம் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11