கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

Share Button

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று காலை 9.30ற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல்ல எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள காணி விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலம் தொடர்பாக, இந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.

இந்தச் சட்டமூலம்; தொடர்பில் தற்பொழுது நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *