ஆபிரிக்க குடியேற்றவாசிகள் பயணித்த படகு டியுனிஸியா கடற்பரப்பில் விபத்து!

Share Button

ஆபிரிக்க குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு லிபியா ஊடாக ஐரோப்பாவிற்கு பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. டியுனிஸியாவை அண்மித்த கடல் பரப்பிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தப் படகில்; 80 பேர் பயணித்துள்ளனர். டியூனிசிய மீனவர்கள் நான்கு பேரை உயிருடன் மீட்டபோதும் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை படகில் பயணித்த 14 பேரின் சடலங்களை கரையோர பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். ஏனையவர்கள் நீரில் மூழ்கி மரணத்திருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதத்த்திலும் குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த படகு ஒன்று டியூனீஸிய கடல் எல்லiயில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 65 பேர் உயிரிழந்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *