அபேதிஸ்ஸ தேரரின் கருத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!

Share Button

கடந்த தினம்  நுகேகொட பேரணியின் போது பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஷரீஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவர் அந்தப் பேரணியில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *