ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து பணியாற்ற வேண்டும்!

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களின் நோக்கமும் இதுவாகும் என அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்திற்கு மாத்திரமே இதுபற்றிய பொருள் கோடலை வழங்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *