தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்வாண்மை ஆலோசனை சபை நியமனம்.

Share Button

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்வாண்மை ஆலோசனை சபையொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. சபையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

கருத்துக்களையும், யோசனைகளையும் சுயாதீனமாக முன்வைத்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை வலுவூட்ட இந்த ஆலோசனை சேவை உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சபைக்கு தலைமை தாங்குகிறார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹெட்ஜ், ஜாவிட் யூஸூப், ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் இராகவன் ஆகியோர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இதேவேளை, தனது மகனின் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று லண்டன் நோக்கி பயணமானார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *