சஹ்ரானுடன் பயற்சி பெற்ற 3 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைப்பு.

Share Button

பயங்கரவாதியான சஹரானுடன் நுவரெலியா பிரதேசத்தில் பயிற்சி பெற்ற இஸ்மாயில் முஹம்மது நஸீர் என்ற பெயருடைய மௌலவி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவர் ரஸ்நாயக்கபுர பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் வசித்து வந்தவராவார். பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இவர் பற்றிய விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள்.

இதேவேளை, சஹரானுடன் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சிப் பெற்ற சாஹூல் ஹமீட் ஹிஸ்புல்லாஹ் என்பவர் நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.

இவர் கடந்த மாதம் 15ஆம் திகதி வெலிமட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *