எரிபொருட்களின் விலை குறைப்பு!

Share Button

எரிபொருள்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்திருப்பதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்ரெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்ரெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. விலை சூத்திரத்திற்கு அமைய இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவாலும், 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *