தாக்குதலுடன் தொடர்பு: வங்கிக் கணக்குகளை பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Share Button
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பல சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க சில அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.
சினமன்ட் கிரேன்ட் ஹொட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தியவர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான ஆரம்ப மெஜிஸ்ட்ரேட் விசாரணைக்கான முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ள சாட்சியாளர்களை ஓகஸ்ட் 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் மெஜிஸ்ட்ரேட் நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *