பல மாவட்டங்களில் டெங்கு தொற்று ஏற்படுவதற்கான ஏது நிலை காணப்படுகிறது

Share Button

பல மாவட்டங்களில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஏதுநிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் சுமார் 26 ஆயிரத்து 791 பேர் டெங்கு தொற்றாளார்களாக இனம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்திரபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்தார். கொழுமபில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று கலந்து கொண்டு அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். பருவப்பெயர்ச்சி காலநிலையுடன் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் உயர்வடைந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வீடுகள், நிர்மாணப்பணிகள் இடம்பெறும் பகுதிகள், வணக்கஸ்தலங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களில் டெங்கு தொற்று பெருக்கமடையக் கூடிய இடங்கள் இனம் கணாப்பட்டிருப்பதாக இந்த ஊடகச்சந்திபில் கலந்து கொண்ட பிரசீலா சமரசிங்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11