யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கப்பட்டது

Share Button

யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

காணிகளை மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரனிடம் ஆளுனர் வழங்கினார்.

பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; எண்ணக்கருவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டன.

2015 ஆண்டு முதல் இன்றுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *