முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Share Button

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாட்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல அடைப்படை உரிமை மனுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் ஒத்துவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று இது தொடர்பான உத்தரவை பிறப்பித்தது. ஐந்து நீதியரசர்கள் குழுhம் முன்னிலையில் குறித்த 12 மனுக்களும் ஆராயப்பட்ட போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பான எதிர்மனுக்கள் இருக்குமாயின் அதனை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை தடுக்காமையே அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *