என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி எதிர்வரும் 24ம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பம்.

Share Button

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி எதிர்வரும்

24ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கண்காட்சி 27ஆம் திகதி வரை அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் கண்காட்சி திறந்து வைக்கப்பட உள்ளது. இதில் 300ற்கு மேற்பட்ட வர்த்தக கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. அனுராதபுரம் விளையாட்டு மைதானத்தில் இதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் கண்காட்சியை முன்னெடுத்தல் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் நிதியமைச்சு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி இரண்டாவது தடவையாக இடம்பெறுகின்றது. கண்காட்சியில் அரச மற்றும் தனியார் வங்கிகளின் தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான சேவையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களும், பயிற்சிகளுக்கான சந்தர்ப்பமும் இதன் மூலம் ஏற்பாடாகியுள்ளன. தொழில் முயற்சியாளர்களுக்கு அரச மற்றும் தனியார் துறையினர் கல்வி, பசுமை, புதிய தயாரிப்பு வர்த்தகம் மற்றும் ஊடக ரீதியான 7 கண்காட்சி வலயங்களைக் கொண்டதாக இந்தக் கண்காட்சி அமையவுள்ளது. இதற்கு மேலதிகமாக புதிய தயாரிப்பாளர்களுக்காக வலயமொன்றும்  அமைக்கப்படவுள்ளது. புத்திஜீவிகள் மற்றும் அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களைக் கொண்ட வலயமொன்றும் கண்காட்சியில் இடம்பெறும். கண்காட்சியைப் பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள கைத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், ஆடைத்தொழில் துறை, சுங்கவரியற்ற பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கும் இங்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அரச நிறுவனங்கள் பலவற்றின் நடமாடும் சேவையும் கண்காட்சி திடலில் இடம்பெறும். வெளிநாட்டு கொன்சியுலர் சேவையும் அன்றைய தினம் இடம்பெறும். சட்ட உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நீதி நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இதில் உண்டு.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11