நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள நுவரெலியா வைத்தியசாலை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது

Share Button

நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள நுவரெலியா வைத்தியசாலை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். 600 கட்டில்களை கொண்ட வோட் தொகுதி, நவீன வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைப் பிரிவு உட்பட பல்வேறு வசதிகளும் இதில் அடங்கும். செலவிடப்பட்ட தொகை 700 கோடி ரூபாவாகும்.

இதேவேளை, மரணதண்டனையை ஒழிப்பது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், ஏனைய கொடூர குற்றவாளிகளுக்கும் மாபெரும் அனுகூலமாக அமையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழிப்பதற்கு காரணமாக அமையும் சக்திகளுக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மகாவலி வலயத்தில் குடியேறிய ஐயாயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் நான்கு மதம் சார்ந்த ஸ்தலங்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் ஒரு காணித்துண்டை பெற்றுக்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *