சோமாலியாவில் இரண்டு தினங்கள் துக்க தினமாகப் பிரகடனம்

Share Button

சோமாலியாவில் இரண்டு தினங்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சோமாலிய ஜனாதிபதி அப்துல்லா மொஹம்மத் விடுத்துள்ளார். சோமாலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்தனர். இதனை முன்னிட்டு துக்க தினம் அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார். சோமாலியாவின் கிஸ்மேயோ நகரிலுள்ள உள்ள மெதீனா ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலுக்கான பொறுப்பை அல்-ஷபாப் பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் கென்யா, தன்சானியா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11