பாகிஸ்தான் அரசாங்கம் அதன் வான்பரப்பை மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்திற்காக திறந்திருக்கின்றது.

Share Button

பாகிஸ்தான் அரசாங்கம் அதன் வான்பரப்பை மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்திற்காக திறந்திருக்கின்றது. பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை இன்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. காஷ்மீர் எல்லைப் பகுதியான பால்கொட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து இந்தியாவின் டெல்லி நகருக்கான விமானம் இன்று அதிகாலை பாகிஸ்தானின் வான்பரப்பின் ஊடாக பயணித்திருக்கின்றது. இந்தியாவின் விமானங்களுக்கும் மீண்டும் பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5