யாழ்ப்பாணத்தின் புதிய பாதுகாப்பு கட்டளைத் தளபதிக்கும், வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

Share Button

யாழ்ப்பாணத்தின் புதிய பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய பலாலியில் அமைந்துள்ள படைகளின் தலைமையகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார். புதிய பாதுகாப்புக் கட்டளைத் தளபதி, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். யாழ்ப்பாணம் உட்பட, வட மாகாணத்தின் பாதுகாப்பு பற்றியும், யாழ் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டன. யாழ் பாதுகாப்புக் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பாதுகாப்பு அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *