நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்திய ஊழல் குறித்து பாராளுமன்ற விவாதம்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடும்.
கொழும்பு வணிக பண்ட நிலைமாற்ற ஸ்தானங்கள் பற்றிய சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் பணம் வழங்கியதாகக் கூறப்படுவது பற்றி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கை மீதான விவாதமும் இன்று இடம்பெறும். இது ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதமாக இடம்பெறவுள்ளது.