மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பான பிரதிவாதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Share Button

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான வழக்கின் சந்தேக நபர் இருவருக்கு இன்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டு பிணையில் செல்ல, கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 25 ஆம் இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, காலிn துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள கடற் பரப்பில் அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்திச் சென்றமை தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதான நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை, உரிய ஆவணங்கள் இன்றி யானைக்குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதவான் திலின கமகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக வனசீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரான உப்பாலி பத்தமசிறி அந்த திணைக்களத்தின் எழுதுவிஞரான பிரியங்கா சஞ்சீவனி, மற்றும் யானைக்குட்டியின் முதல் உரிமையாளராக முன்னிலையான சந்திரரத்ன பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஒரு கொடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களையும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க கோட்டை நீதவான் ரங்க திஸ்ஸாநாயக்க இன்று உத்தரவிட்டார்.

இதனிடையே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புக்கள், நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலான சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 4 உறுப்பினர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிடி விறாந்து பிறப்பித்தார். நஜித் இந்திக்க, நுவான் புத்திக, ஆக்மா பிரியதர்ஷ மற்றும் அசங்க விஜயவர்த்தக ஆகியோருககு எதிராக்வே இவ்வாறு பிடிவிறாந்து விடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *