சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கப்படுகிறது

Share Button

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தேசிய அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரூபா நிதியை தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான நிதியம் வழங்கியிருப்பதாக அந்த மத்திய நிலையத்தின் பணி;ப்பாளர் சமிந்த பத்திராஜ் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். மாவட்ட செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த நிதி வழங்கப்படவுள்ளது. அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் நிதி மாவட்;ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அனர்த்தனம் காரணமாக சேதத்திற்குள்ளாகும் சொத்துக்கள் மற்றும் மரணங்களுக்காக நஷ்டஈடு வழங்கப்படும். முதல் கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக பத்தாயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக சமிந்த பத்திராஜ் தெரிவித்தார். அதற்காக 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 187 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எட்டு மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. நாலாயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். 89 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 801 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அவற்றுள் எட்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 21 சிறு மற்றும் மத்தியதர வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நோட்டன்பிரீஜ் மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்றகாலநிலை காரணமாக நோட்டன்பிரீஜ் – மஸ்கெலியா பிரதான வீதியின் மௌசாகலை பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மஸ்கெலியா நோட்டன் பிரிஜ் பிரதான வீதயின் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது இந்த சம்பவம் இன்று பிற்பகல்; இடம்பெற்றதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த வீதியில் முறிந்து விழுந்த மரத்தினை அகற்றும் பணிகளில் மௌசாகலை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பலத்த காற்றுடன் கூடிய காலை நிலை காரணமாக குறித்த வீதியில் பயணிக்கும் வாகனசாரதிகளை மிக அவதானமாக போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு நோட்டன்பிரீஜ் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை மலையகத்த்தில் தொடரும் சீரற்றகாலை காரணமாக மலையகத்தில் உள்ள

நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. திம்புள்ள- டெவன்போல் நீர்விழ்ச்சி தலவாகலை சென்கிளயார் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்pன் வேகம் அதிகரித்து காணபடுகிறது.

இதேவேளை கொத்மலை நீர் தேக்கம், காசல் ரீ நீர்தேக்கம,; கெனியன் நீர்தேக்கம்,

மௌசாகலை நீர்தேக்கம் ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமும்

அதிகரித்து காணப்படுகிறது. அதிகமான மழை விழ்ச்சி காணபடும்

சந்தர்ப்பங்களில் நீர்தேக்கங்களில் உள்ள வான்கதவுகள் திறக்கபட வேண்டிய

நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கபடுகிறது. இதேவேளை நேற்றய தினம் அதிக

மழையின் காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூரியவௌ – காரியாய மாவத்தையில் ஆலமரம் ஒன்று முச்சரவண்டி மீது முறிந்து வீழ்ந்தலில் மூன்று பேர் பலியாகினர். இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும் இடங்குகின்றனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11