சிறுபோக செய்கையின் பாதிப்புக்கான நட்டஈடு வழங்க 55 கோடி ரூபா ஒதுக்கீடு

Share Button

கடந்த சிறுபோக நெற் செய்கையின்போது பாதிப்புக்குள்ளான விளைச்சலுக்கான நஷ்ஈடு வழங்குவதற்காக 55 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த நட்டஈடு வழங்கும் நிகழ்வு அடுத்த மாதம் 2 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராபுரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய ஓய்வூதிய காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியாகவுள்ள விவசாயிகள் இணைந்து கொள்ள முடியும். இதற்கான பதிவுகள் விரைவாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்திற்காக இதுவரை 9 இலட்சத்து 95 ஆயிரம் விவசாயிகள் தங்களை பதிவு செய்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *