பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடுகிறது

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை முற்பகல் 10.30க்கு மீண்டும் கூடுகிறது. தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதன் போது அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, குற்ற விசாரணைத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனெவிரட்ன, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஜயசுந்தர மற்றும் அந்தப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தரங்க பத்திரண ஆகியோர் நாளைய தினம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விசேட தெரிவுக் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *