பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Share Button

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கன்ஸர்வேட்டிவ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெரமி ஹன்ட்டை தோற்கடித்ததன் மூலம் அவர் கட்சியின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றார். பிரதமர் தெரேஸா மேயின் இடத்திற்கு பொரிஸ் ஜோன்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. பிரதமர் தெரேஸா மே பிரித்தானியாவின் பிரதமராக பணியாற்றும் கடைசி தினம் இன்றாகும். புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்ஸன் நாளை உத்தியோகபூர்வமாக பதவியை ஏற்றுக் கொள்ளவிருக்கின்றார். தெரேஸா மேயின் அமைச்சரவையில் பணியாற்றும் பலரும் இன்று அல்லது நாளை இராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பொரிஸ் ஜோன்ஸனுக்கு 92 ஆயிரத்து 153 வாக்குகள் கிடைத்ததோடு, ஜெரமி ஹன்ட் 46 ஆயிரத்து 656 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *