பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டவுள்ளார்

Share Button

பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக பொரிஸ் ஜோன்சன் (டீழசளை துழாளெழn) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் போட்டியிட்ட வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட்டை தோற்கடித்ததான் மூலம் ஜோன்சன் அந்த பதவிக்கு தெரிவானார். கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக கன்சவேட்டிவ் கட்சியின் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

அவற்றுள் 92 ஆயிரத்து நூற்று 53 வாக்குகளை பொரிஸ் ஜோன்சன் பெற்றார். ஜெரமி ஹன்ட் 46 ஆயிரத்து 656 வாக்குகளையே பெற்றார்.

அதன்படி கட்சவேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ளதாக பீ பீ சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் பொரிஸ் ஜோன்சனுக்கு, முன்னாள் பிரதமர் தெரேசா மே யும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11