உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று தாஜ் சமுத்திரா ஹொட்டலில் விசேட பிரமுகர்கள் குழுவொன்று தங்கியிருக்கவில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்.

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நேரடி தொடர்புகள் உள்ளமைக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன் நேற்று சாட்சி வழங்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன இதனைத் தெரிவித்தார். இந்தத் தெரிவுக்குழு நேற்று நண்பகல் 10.30ற்கு கூடியது.
பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவும் ஆணைக்குழு முன் சாட்சியளித்தார். மாவன்னல்ல மற்றும் ரம்புக்கணை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் சம்பவங்கள் தொடர்பில் பெருமளவிலானோரை கைது செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டார். குருநாகல் வைத்தியர் முஹம்மத் ஷாபி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலும் இதன் போது கேள்வி எழுப்பப்;பட்டது. வைத்தியர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் தயாரிக்கப்பட்டதாக ஷானி அபேசேகர தெரிவித்தார். வைத்தியருக்கு எதிராக 617 பெண்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில் 149 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் விசேட பிரமுகர்கள் குழுவொன்று தங்கியிருந்தமைக்கான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *