இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் இன்று இரண்டு பிரதிநிதிகள் ஆஜரானார்கள். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் அந்நியச் செலாவணி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஆர் ஜயரட்ன ஆகியோர் இதில் சாட்சியமளித்தார்கள்.
பட்டிக்கலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்திற்காக முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும், அவரது மகனும் எவ்வாறு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றி இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. 2017ஆம் ஆண்டில் நிதிச்சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் இந்த நிதியை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று பணிப்பாளர் கூறினார்.
கோடிக்கணக்கான கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இரண்டு கோடி 60 லட்சம் ரூபா அந்நியச் செலாவணி இலங்கைக்கு எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி இரகசியமான விசாரணையின் போது விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய, இது குற்றச் செயலாக அடையாளப்படுத்தப்படவில்லை. குற்றச் செயல் அல்லாத ஒன்றிற்காக தண்டனை வழங்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார். பட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்திற்கு சவூதி அரேபியாவிலிருந்து ஆயிரத்து 750 கோடி ரூபா கிடைத்திருப்பதாக எஃப்.சி.ஐ.டி அறிவித்திருந்தாலும், இரண்டு கோடி 60 லட்சம் ரூபா மாத்திரமே கிடைத்திருப்பதாக மத்திய வங்கிக்கு அறியக்கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு தொகைகளிலும் மத்திய வங்கியின் கூற்றே உண்மையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *