பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளினால் அபார வெற்றி.

Share Button

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நேற்று இடம்பெற்றது. இதில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் 98 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. அவிஸ்க 82 ஓட்டங்களையும், மத்தியுஸ் 52 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *